
ஜிமைல் தொழிநுட்பம் மேலும் விரிவு படுத்தப்படுகின்றது. “Priority Inbox” எனும் புதிய வசதியை கூகிள் இன்று அறிமுகப்படுத்திவைத்துள்ளது. “Priority inbox” என்றால் என்ன? இதன் பயன்பாடு என்ன??
நாம் ஒவ்வொரு நாளும் பல மின்னஞ்ஞல்களை பெறுகிறோம். அவற்றில் சிலதை முன்னுரிமைப் படுத்தியும் சிலதை இறுதியிலும் வாசிக்கிறோம். ஏன் , சிலதை வாசிக்காமலேயே விடுகிறோம். நமக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்ஞல்களில் முக்கியமானதை தேடிப்பிடிக்க குறைந்தது ஒரு சில நிமிடங்களையாவது செலவு செய்கிறோம்.
இனி அந்தக் கவலை வேண்டாம். முக்கியமான மின்னஞ்ஞல்களை தேடிப்பிடிக்கும் வேலையை நீங்கள் செய்ய தேவையில்லை. ஜி-மைலே அதனை செய்யத் தயாராகிவிட்டது. அவ்வாறு முக்கியமானதை தரப்படுத்தி இந்த புதிய “Priority Inbox” க்கு மாற்றிவிடும். இனி எனது அன்புக்குரியவன் அனுப்பும் மைலை நான் தேட வேண்டிய அவசியம் எனக்கு இருக்காது.
இந்த தரப்படுத்தலை / வகைப்படுத்தலை ஜி-மைல் தானாகவே மேற்கொள்கிறது( விரும்பினால் நீங்களும் அந்த செயற்பாட்டில் கைகோர்த்துக் கொள்ளலாம்). இந்த “Priority Inbox” 3 கட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கும்.
Important and unread
Starred
Everything else.
இந்த புதிய தொழிநுட்பத்தை கட்டம் கட்டமாக கூகிள் வினியோகித்து வருகின்றது (சிலருக்கு விநியோகிக்கப்பட்டு விட்டது) . மிக விரைவில் (இந்த வாரத்திற்குள் ) உங்களையும் வந்தடையும் என்று கூகிள் கூலாக சொல்லியிருக்கிறது(http://gmailblog.blogspot.com/2010/08/email-overload-try-priority-inbox.html) . காத்திருப்போம்.. கதையல்ல.. நிஜம்..
ஜி-மைல் அறிமுகப்படுத்தும் முன்னுரிமை பெட்டி [Priority Inbox]
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment