விஸ்டாவின் ஆக்டிவேஷனை பேக்கப் செய்வது எப்படி?

Friday, 11 September 2009 ·

இக்கட்டுரையானது விஸ்டா தொகுப்பின் “Genuine ” பதிப்புகளை உபயோகிப்பவருக்கு மட்டுமே…”Pirated” தொகுப்பை உபயோகிப்பவர்கள் இக்கட்டுரையை தவிர்க்கலாம்.
உங்கள் கணினியானது “Branded ” ஆன கணினியா? சான்றாக Dell,HP,Compaq,Fujitsu, Acer போன்ற கணினிகளை “Genuine ” ஆக வாங்கும்போது ஆப்பரேட்டிங் சிஸ்டமானது உங்களது கணினியில் “preinstall ” செய்யப்பட்டு இருக்குமல்லவா? மேலும் உங்களுடைய “vista” தொகுப்பானது ஏற்கனவே ஆக்ட்டிவேஷன் செய்யப்பட்டிருக்கும். இதனை பொதுவாக “OEM ” எடிஷன் என்று கூறுவார்கள். மேலும் கணினியில் பிழை ஏற்பட்டு மக்கர் செய்யும் போது ரீஸ்டோரேஷன் செய்துகொள்ள ஏதுவாக அவர்களே “Recovery cd ” தந்தும் இருப்பார்கள் இந்த “Recovery cd” ஐ போட்டு நீங்கள் கனினியை வாங்கும் போது இருந்த நில‌மைக்கு கொண்டுவரலாம். இது பொதுவாக எல்லா கணினி தயாரிபாளர்களும் செய்வது தான் அவர்களது ரீஸ்டொரேஷன் டேட்டாவை ஹார்டு டிஸ்க்கின் ஒரு பகுதியில் “hidden” ஆக சேமித்து வைப்பார்கள். நீங்கள் “recovery cd ” ஐ போட்டவுடன் இந்த “hidden ” பார்ட்டீஷனலிருந்து ரீஸ்டொர் ஆகும். பைரஸியை ஒழிக்கவேண்டி தற்போது அனைத்து நிறுவங்களும் ஆப்பரேடிங் சிடி தருவதை நிறுத்திக்கொண்டனர். இது எல்லாம் எல்லாம் சரி தான்…

ஆனால் என்னுடைய வாதம் என்னவென்றால் நாம் விலை கொடுப்பது நம்முடைய ஆப்பரேடிங் சிஸ்டத்திற்கும் சேர்த்து தான். வாரண்டி ஒரு வருடம் என வைத்துக்கொள்வோம் ஒரு வருடத்திற்கு பிறகு ஹார்டு டிஸ்க் பழுதாக போனால் என்ன செய்வது? அல்லது உங்களுடைய “hiden partition” கரப்ட் ஆகிவிட்டால்? அதுவும் இல்லாமல் உங்களுடைய “recovery cd” damage ஆகிவிட்டாலோ உங்களின் கணினி நிறுவனமோ அல்லது மைக்ரோசாப்டோ வேறு விஸ்டா தொகுப்பை இலவசமாக கொடுப்பார்களா?.

மேலும் ஒன்று தெரிந்துகொள்ளுங்கள் உங்களுடைய “Co Authentification Certificate ” ஸ்டிக்கரில் இருக்கும் எண்ணும் உங்களின் நிறுவனத்தால் நிறுவப்பட்டிருக்கும் சாவி எண்ணும் மாறுபடும். இந்த சாவி எண்ணை நீங்கள் விஸ்டாவை ரீ இன்ஸ்டால் செய்தாலும் உங்களிடம் ஆக்டிவேஷனை கேக்கும் ஆனால் இந்த ஆக்டிவேஷனை நீங்கள் மைரோசாப்டின் இணையதளத்தில் செய்யமுடியாது. தொலைபேசி வழியாகதான் செய்ய வேண்டும். இந்த தலைவலி எல்லாம் தேவையா?? இதோ இருக்கிறது ஒரு எளிய வழி. உங்களின் கணினி நல்ல நிலையில் இயங்கும் போதே உங்களுடைய ஆக்டிவேஷனை பேக்கப் செய்துவிடுவது நல்லது இதற்கென ஒரு இலவச மென்பொருள் உள்ளது அதன் பெயர் ABR (Activation Backup & Recovery).

இதனை பதிவிறக்கம் செய்து,அதை Winzip அல்லது Winrar துணைக்கொண்டு extract செய்துகொள்ளவும் இப்போது “ABR ” போல்டரில் இருக்கும் “activation_backup.exe ” என்ற பைலை “Run as administrateur ” என்று இயக்கவும்.


இப்போது ஒரு கமாண்ட் பிராம்ப்ட் தோன்றி உங்களுடைய ஆக்டிவேஷன் டேட்டாக்கள் பேக்கப் செய்யப்படும். பேக்கப் முடிந்ததும் என்டர் செய்யவும்.


அவ்வளவுதான் இனி “ABR” போல்டரில், vista activation பைல்கள் இருக்கும் இதனை (ABR) அப்படியே பென்டிரைவோ அல்லது ஆன்லைன் ஸ்டொரேஜ், சிடி போன்ற ஏதாவது ஒரு இட‌த்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளவும். உங்களுடைய விஸ்டா மக்கர் பன்னும்போது அல்லது உங்களுடைய ரீஸ்டோரேஷன் காலை வாரும் போது உங்கள் நண்பரிடமோ அல்லது யாரிடமோ உங்களின் கணினியில் என்ன விஸ்டா வெர்ஷன் போடப்பட்டிருந்ததோ (vista home premium or basic etc.. )அதே வெர்ஷனை வாங்கவும். பின்னர் அந்த சிடியை போட்டு விஸ்டாவை சாவி எண் இல்லாமல் மற்றும் “autoactivate vista when iam online” என்பதை நீக்கிவிட்டு நிறுவவும். பின்னர் நீங்கள் பேக்கப் செய்திருந்த “ABR” போல்டரில் இருக்கும் ” activation_restore.exe” என்ற பைலை “Run as administrator ” இல் இயக்கவும்.



இனி, உங்கள் கணினியின் விஸ்டா “ஆக்டிவேஷன்” வெற்றிகரமாக முடிந்துவிடும். இனி, விஸ்டா ஆக்டிவேஷன் தொல்லையும் இல்லை.

1 comments:

Anonymous said...
14 September 2009 at 18:59  

article copied from www.pudhuvai.com


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts