
அனைத்தும் கையடக்கமாக வந்துகொண்டிருக்கையில் வருடி எனப்படுகின்ற
ஸ்கானர்களும் கையடக்கமான கைப்பிள்ளையாக வருவதில் வியப்பில்லைதானே.இது
போன்றவை சந்தைக்குப் புதியதல்லதெனினும் அண்மையில் வந்திருக்கும்
வருடியினையே படத்தில் காண்கிறீர்கள்.
‘பென் டிறைவர்’ போன்று கையில் கொண்டு செல்லக்கூடிய வருடியான PENTAX இனது DSMobile600 ஆனது பயன்படுத்த இலகுவானது என பரீட்சார்த்த முடிவுகள் கூறுகின்றன. இதில் 0.8 மி.மீ தடிப்பு வரையான ஆவணங்களை வருடல்(ஸ்கானிங்) செய்ய முடியும். USB மூலமாக கணினியுடன் இணைக்கப்படக்கூடிய இந்த வருடியில் வருடல் செய்த ஆவணங்கள் PDF ஆக மாற்றப்பட்டு சேமிக்கப்படலாம். இதில் உள்ள பொத்தான்(பட்டன்) மூலம் இதனுடன்
இணைக்கப்பட்டுள்ள மென்பொருளுடாக வருடல் செய்ய முடியும். இருந்தபொழுதிலும் விரும்பிய மென்பொருட்களினூடாகவும் வருடலாம்.வருடும்போது ஆவணம் இதனுடாக சென்றுகொண்டிருக்க இறுதியில் வருடல் பூர்த்திசெய்யப்படும்.அதாவது சாதாரண அச்சுப்பொறி(பிறின்டர்) தொழில்நுட்பத்தை ஒத்தது.இதன் இலங்கைப்பெறுமதி சுமார் ரூபா 18,000 ஆகும்.
”கைப்பிள்ளையாக” ஸ்கானர்
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment