
வலையமைப்புகள் (Networks) எப்படி செயல்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ள, வெவ்வேறு வகையான வலையமைப்புகளையும் அவற்றுடன் இணைந்த சில பெயர்களையும் தெரிந்து கொள்வது அவசியம்:
லோக்கல் ஏரியா நெட்வேக் (Local Area Network)
வைட் ஏரியா நெட்வேக் (Wide Area Network)
இணையம் (Internet)
பேக்கெட்டுகள் (Packets)
போர்ட்டுகளும் முகவரிகளும் (Ports and Addresses )
ஃபயர்வால்கள் (Firewalls)
செர்வர்கள் (Servers)
Local Area Network
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கணினிகள் Networks, Cards அல்லது Cables கொண்டு இணைக்கப்படும்போது, ஒரு Local Area Network அல்லது LAN உருவாக்கப்படுகிறது. இந்த நெட்வேக்கில் உள்ள அனைத்து கணினிகளும் பகிர்ந்து கொள்ளப்பட்ட Files மற்றும் Folder களை அணுக முடியும். Printers மற்றும் இணைய இணைப்பு (Internet Connection) உள்ளிட்ட ஆதாரங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்.
இது இரு கட்டடங்களுக்கிடையிலோ அல்லது ஒரு குறிப்பிட்ட பூகோள எல்லைக்குள்ளோ இருக்கலாம்.
Wide Area Network
இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட LAN கள் இணைக்கப்படும்போது, ஒரு Wide Area Network அல்லது WAN உருவாக்கப்படுகிறது. பெரும்பாலும், WAN பல்வேறு இடங்களில் உள்ள அலுவலகங்களை குத்தகைக்கு எடுக்கப்பட்ட இணைப்புகள் (Leased Lines) அல்லது VSAT (Very Small Aperture Terminals) அல்லது அதே போன்ற ஊடகங்களை கொண்டு இணைக்க பயன்படுகிறது. WAN என்பது பூகோள ரீதியாக பரவிய தொலைத்தொடர்பு நெட்வேக்காகும்.

Internet
எளிமையாக சொன்னால், இது போன்ற WAN வலையமைப்புகளின் வலையமைப்பினை (Network of Networks) பொதுவான ஒரு பெயரிடு முறையின் கீழ் அனைவரும் அணுகும்படி செய்வதே Internetஅல்லது இணையமாகும். இணையம், ஒரு வலையமைப்பின் எந்த ஒரு கணினியில் இருந்தும் மற்றொரு வலையமைப்பின் மற்றொரு கணினிக்கு தகவல்களை கொண்டு செல்கிறது. இதனால், இணையம் தகவல் சுமந்து செல்லும் பொது ஊடகமாக செயல்படுகிறது.
இணையம் என்பது கணினிகளின் ஒரு Electronic Network ஆகும். இணையத்தின் அனைத்து கணினிகளும் நிர்ணயம் செய்யப்பட்ட தரமான இணைய நெறிமுறை (IP) வழியே இயங்குகிறது. ஒரு கணினியில் இருந்து தகவலை மற்றொரு கணினியில் இருக்கும் பயனாளர்கள் (அனுமதி இருப்பவர்களுக்கு மட்டும்) எடுத்துக் கொள்ள இணையம் அனுமதிக்கிறது.
Packets
ஒரு Packet என்பது இணையத்தின் மூல கணினிக்கும் (Main PC) இலக்கு கணினிக்கும் (User’s PC ) இடையே வழி நடத்தப்படும் தரவு உறுப்பு ஆகும். தகவலை ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு இணையம் வழியே அனுப்பும்போது, இந்த தகவல் சிறப்பாக சென்று சேரும் பொருட்டு சிறு சிறு Packet டுகளாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு Packet க்கும் ஒரு அடையாள எண் கொடுக்கப்பட்டு அந்த எண்கள் User’s PC க்கு தெரிவிக்கப்படுகிறது. இந்த Packet கள் இணையத்தின் பல்வேறு தடங்கள் வழியே செல்கின்றன. அவை இலக்கு கணினியை அடைந்தவுடன், அங்கு Packet கள் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டு மூல தரவாக மீண்டும் மாறுகிறது.
இணையப் பக்கம் (Web Page), மின்னஞ்சல் (e-mail) செய்திகள் மற்றும் பதிவிறக்கங்கள் உள்ளிட்ட இணையம் வழி செல்லும் ஒவ்வொன்றும் Packet ளாகவே பிரிக்கப்படுகிறது.
Ports & Addresses ஒரு வலையமைப்பின் ஒவ்வொரு கணினிக்கும் IP (Internet Port ) முகவரி எனப்படும் ஒரு தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. Packet கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட IP முகவரியின் குறிப்பிட்ட Port க்கு முகவரியிட்டு அனுப்பப்படுகின்றன. இந்த IP முகவரி Packet களை தங்களது இலக்குகளை நோக்கி செலுத்துகிறது. இந்த IP முகவரி இரு வகையான வேலைகளை செய்கிறது.
இலக்கு கணினியின் நெட்வேக் பாகம் மற்றும்
மூல கணினி
ஒரு வலையமைப்பில் தரவினை அனுப்பும் மற்றும் பெறும் ஒவ்வொரு பயன்பாட்டிற்கும் ஒரு சிறப்பு Port No ஒதுக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட Port தகவல் Packet களை பெறும்போது, கணினி எந்த பயன்பாடு அந்த Packet இனை பெறுகிறது என்பதை அறிகிறது. உதாரணமாக, Port 80 இணையத்தளங்களின் Web Server களுக்கானது, Port 25 ஐ மின்னஞ்சல் உபயோகிக்கிறது.
Firewalls
Firewall, Network இன் ஒரு பகுதியை மற்றொரு பகுதியில் இருந்து பிரித்து, அனுமதிக்கப்பட்ட Network போக்குவரத்தை மட்டுமே இடையே அனுமதிக்கிறது.
சில Firewall கள் Network இனை கடக்கும் Packet களை பரிசோதித்து அவை உண்மையானவைதானா என்று உறுதி செய்கின்றன. சந்தேகத்திற்குரியதாக இருந்தால், Firewall அந்த Packet களை வடிகட்டுகிறது. உங்களது Network இற்குள் உங்களது கணினியின் அடையாளத்தையும் Firewall மறைத்து விடுகிறது. இதனால் Hacker களும் இணைய வல்லூறுகளும் தனிநபர் கணினிகளை இலக்காக கொள்ள முடியாமல் ஆகிறது.
Servers Server என்பது ஒரு Network கில் இணைந்துள்ள ஒரு கணினி அமைப்பாகும். இது பிற கணினி அமைப்புகளுக்கு சேவைகளை வழங்குகிறது. இது Printer களை பகிர்ந்து கொள்வது, File களை சேமிப்பது அல்லது Web Page ளை விநியோகிப்பது போன்ற செயல்பாடுகளை புரிய பயன்படுகிறது.
பல Server கள் குறிப்பிட்ட பணிக்கென அர்ப்பணிக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு File Server என்பது File களை சேமிப்பதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள ஒரு கணினி மற்றும் சேமிப்பு சாதனமாகும். Network கில் இருக்கும் எந்த ஒரு பயனாளரும் இந்த File Server ல் கோப்புகளை சேமிக்கலாம். ஒரு Printer Server என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட Printerகளை கையாள்கிறது.
சில Servers பிற காரணங்களுக்காகவும் உபயோகிக்கப்படலாம். உதாரணமாக, அலுவலகத்தில் இருக்கும் ஒரு நபர் ஒரு பெரிய சக்தி வாய்ந்த Desktop கணினியை தன்னுடைய Desktop கணினியாக பயன்படுத்தும் அதே சமயத்தில் பிற கணினிகள் அதனை ஒரு Server ஆகவும் பயன்படுத்தலாம்.
வலையமைப்புகளும் இணையமும்…
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment