கூகிளின் தொடரும் அதிரடி வெற்றிகள்!

Sunday, 25 October 2009 ·

இணையத் தேடுபொறி நிறுவனமான கூகிள் தான் இணைய உலகின் அரசன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. இவ்வாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு பருவத்தில் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் ஈட்டியுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது


உலகம் முழுவதும் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி கூகிளைப் பாதித்ததாகத் தெரியவில்லை. மைக்ரோசாஃப்ட், யாஹூ போன்ற நிறுவனங்கள் இணையச் சந்தையில் தங்கள் இருப்பை நிலைநிறுத்தப் போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் கடந்த ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய லாபத்தை விட 27 விழுக்காடு அதிக லாபம் ஈட்டி கூகிள் சாதனை புரிந்துள்ளது.

மைக்ரோசாஃப்டின் பிங் தேடுபொறி வளர்ச்சி பெற்றாலும் இப்போதைக்கு கூகிளின் அருகில் கூட நெருங்கமுடியாத வண்ணம் வெகுவாகப் பின்தங்கி இருக்கிறது. யாஹூவோ கடும் நட்டத்திலிருந்து மீளப் போராடிக் கொண்டிருக்கிறது. எனவே தற்போதைக்கு கூகிள் தான் இணைய விளம்பர உலகின் முன்னணி நிறுவனம் என உறுதியாகக் கூற இயலும்.

இதற்கிடையே அமேசான் போன்ற இணையம் மூலம் புத்தக விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் இன்னொரு முயற்சியை கூகிள் வெகுவிரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும், அதோடு மட்டுமின்றி பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஆன்லைனில் விற்பனை செய்யவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts