
விண்டோஸ் ஆனது உலகின் பலமான இயங்கு தளம்(ஒப்பரேட்டிங் சிஸ்டம்)
என்பது அனைவரும் அறிந்ததே. கணினிப் பயன்பாடு, இணையம் மற்றும்
வன்பொருள்(;(Hardware), ஆகிய பலவற்றிற்கும் உறுதுணையாக பல கருவிகள் விண்டோஸ்
இயங்குதளத்தில் உள்ளது. இவற்றிற்கும் மேலாக பயனாளர்களுக்கு வேண்டிய பல
புரோகிராம்களும் (பிரயோக மென்பொருள்கள்)உள்ளன. அவற்றில் சில முக்கியமானவற்றை
பார்ப்போமா?
எம்எஸ் பெயின்ட் (MS Paint)
எளிமையான வண்ணப் படங்களை வரைவதற்கான மென்பொருளாகும். எம்.எஸ்.பெயின்ட்டில்
வரைந்த படங்களை Desktop இற்கு பின்னணியாகக் கூட மாற்றலாம். Starts மெனுவில்
All Programms துணை மெனுவில் Accessoriesள இல் Paint ஐ கிளிக் செய்து பயன்படுத்த வேண்டும்.கணினியை முதலில் பயன்படுத்த முனைவோருக்கு மவுஸ் பாவனையில் பரீட்சயம் வருவதற்கு இது பெரிதும் உதவும்
வேர்ட்பட் (Wordpad)
வேர்ட்பட் ஒரு விரைந்து செயல்படக்கூடிய சொல் திருத்தி (Text Editor). சிறிய
அளவிலான கடிதப் போக்குவரத்துப் பணியை இந்த அப்ளிகேஷனில் நாம் செய்யலாம்.
Notepad க்கும் இந்த புரோகிராமுக்கும் இடையில் உள்ள வேறுபாடு இந்த புரோகிராமில்
எழுத்துரு(Font) அளவு மாற்றுவது, அடிக்கோடிடுவது போன்ற சில வசதிகள் இருக்கின்றன.
கல்குலேட்டர் (Calculator)
நாம் அன்றாடம் பயன்படுத்தும் கல்குலேட்டரின் மென்பொருள் வடிவமென இதைக் கூறலாம்.
கூட்டல், பெருக்கல், கழித்தல், வகுத்தல் மற்றும் பல பணிகளை விரைந்து செய்யலாம்.
இதைப் பயன்படுத்த Num Lock கீயைத் தட்டி Numaric KeyPad ஐ On செய்தல்வேண்டும், மேலும் எண்கள் மீது மவுஸை வைத்து கிளிக் செய்தும் கல்குலேட்டர் புரோகிறாமை இயக்கலாம்.
ஸ்கான் டிஸ்க் (Scan Disk)
கணினியை வேலை செய்து கொண்டிருக்கும் போது தவறான முறையில் நிறுத்தினால்
கோப்புக்கள் சேதமடையலாம் மின்தடைகளால் கணினி; திடீரென்று நின்று போனாலும்
கோப்புக்கள் பாதிப்படைவது உண்டு. ஸ்கான் டிஸ்க்( Start -> Programs ->Accessories -> System Tools -> Scan Disk.) என்ற இந்த புறோகிராம் கணினியில் கோப்புக்களில் பிரச்சனைகள் இருந்தால் சரி செய்கிறது.
Disk Defragmenter
(Start->Programs->Accessories-> System Tools->Disk Defragmenter)
நாம் கம்ப்யூட்டரை பயன்படுத்தி பல மென்பொருட்களையும் தரவுகளையும் சேமிக்கின்றோம். வுன்தட்டில்(கார்ட்டிஸ்க்கில்) இவை சேமிக்கப்படும் போது பல பகுதிகளில் வெற்றிடங்கள் உருவாகின்றன. இதனால் ஒரு கோப்பை திறப்பதற்கே வெகு நேரம் ஆகிறது. இந்த வெற்றிடங்களை டிஸ்க் ட்ராக்மெண்டர் ஆனது நிரப்பி தகவல் துண்டுகளை சரியாக அடுக்கிவைக்கிறது. இந்த புரோகிராமை மாதம் ஒரு முறை இயக்கி சிறப்பாக செயல்பட
வைக்கலாம்.
விண்டோஸில் உள்ள பயனுள்ள புரோகிராம்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment