இதோ வருது. அதோ வருதுன்னு சொல்லி ஒரு வழியா அக்டோபர் 16 வருதுன்னு அதிகார்ப்பூர்வமா அறிவிச்சுட்டாங்க. அது மட்டும் இல்லாம கணினி தயாரிப்பு நிறுவனங்களுக்கும் அவங்க கணினியில நிறுவுவதற்க்காக (pre-installed) விண்டோஸ் 7 பதிப்பை அனுப்பிட்டாங்க. இதுக்கு இடையில விண்டோஸ் 7 சோத்னை பதிப்பான RC 1 பதிப்பையும் வெளியிட்டு இருக்காங்க.
FIR : முதல் தகவல் அறிக்கை : விண்டோஸ் 7
இந்த RC 1 பதிப்பு ஜுன் மாதம் தேதியிட்ட டிஜிட் (Digit) இதழில் இலவசமா கொடுத்திருக்காங்க. என்ன தான் புத்தகத்த ஜுன் மாதமே வாங்கிட்டாலும் விண்டோஸ் 7 நிறுவுவதற்க்கான நேரம் நேற்று தான் வந்தது.
விஸ்டா வெளிவந்த போது அது அப்போது பயன்பாட்டில் இருந்த எக்ஸ்.பி.யை விட முற்றிலும் மாறுபட்டிருந்தது. அதன் காரணமாகவும் பயன்படுத்தும் போது தேவை இல்லாமல் வந்து இம்சை செய்யும் permission விண்டோக்களினாலும் விஸ்டா தோல்வி அடைந்தது. மேலும் விஸ்டா பதிப்பை வெளியிடும் முன், பாதுகாப்பில் பல மாற்றங்கள் செய்துள்ளதாகவும், எந்த வித வைரஸாலும் தாக்க முடியாத்து என்றும் அறிவித்தது மைக்ரோசாப்ட். உண்மையில் விஸ்டா சிறந்த முறையில் வைரஸ்களை எதிர்கொண்டது என்றே கூற வேண்டும். (newfolder.exe என்ற வைரஸ் எக்ஸ்.பி.யில் பலமான பாதிப்புகளை ஏற்ப்படுத்தியது. விஸ்டா விலும் அந்த வைரஸ் பரவியது என்றாலும் பெட்டிப் பாம்பாய் ஒரு மூலையில் அடங்கி விட்டது. கணினியில் அது எந்த பாதிப்பையும் ஏற்ப்படுதவில்லை). எனினும் விஸ்டா வின் வைரஸ் பாதுகாப்பு முழுமையாக இல்லை. விஸ்டா வெளிவந்த சில மாதங்களிலேயே அதனை பாதிக்க கூடிய வைரஸ் தொகுப்பும் வந்து விட்டது.
ஏற்கனவே விஸ்டா தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மைக்ரோசாப்ட் மீளவில்லை போல் தோன்றுகிறது. விண்டோஸ் 7 முழுவதும் விஸ்டா வாடை இருந்துகொண்டே இருக்கிறது.
முதலில் விண்டோஸ் 7 பூட் செய்யும் போது வரும் "Install Now" முதல் இறுதி வரை விஸ்டாவின் நகல் போல தோன்றுகிறது. பேக்கிரவுண்ட் படம் மட்டும் மாறி உள்ளது. பூட் செய்து முடித்த பின்னர் கணினியை மீண்டும் ஆன் செய்யும் போது, முதலில் தெரியும் "Loading Windows" போது வரும் விஸ்டாவில் வரும் பச்சை நிற ப்ரீ-லோடர் இல்லை. அதற்கு பதிலாக நான்கு சிறிய பந்துகள் வந்து அவை விண்டோஸ் லோகோவாக மாறுகிறது. இதனைக் காட்டிலும் ப்ரீ-பீட்டா (pre-beta) பதிப்பில் இருந்த வெள்ளை நிற ப்ரீ-லோடர் நன்றாக இருந்தது.
உள்ளே சென்றதும் முதலில் நம் கண்ணில் படுவது மாற்றப்பட்ட டாஸ்க் பார் தான். இதற்கு முன் வந்த பதிப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது டாஸ்க் பார். மேலும் டாஸ்க் பாரும் குவிக் லான்ச் பாரும் அழகாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதுவரை டாஸ்க் பாரில் பெயர்களை மட்டும் பார்த்து வந்த நமக்கு கலர் கலராய் படங்கள் தெரிவது ஒரு புது அனுபவம். மேலும் எக்ஸ்ப்லோரரில் (win explorer) ஏதேனும் லோட் ஆகும் பொழுது லோடிங் அளவு டாஸ்க் பாரில் தெரிவது நல்ல ஐடியா. மற்றொரு குறிப்பிட வேண்டிய மாற்றம் "show desktop" பட்டன். குவிக் லான்ச் பாரில் இருந்த இதை டாஸ்க் பாரின் வலப்பக்க மூலைக்கு மாற்றி உள்ளனர். ஆனால் இதை பயன்படுத்துவது சுலபமாக இல்லை. ஒரு வேளை பழகி விட்டால் சரி ஆகி விடக்கூடும்.
Notification Areaவில் உள்ள ஐகான்கள் விண்டோஸ் 98ஐ நினைவு படுத்துகிறது. அதை இன்னும் சற்று கிராபிக்கலாக செய்து இருக்கலாம். டெஸ்க்டாப்பில் இன்னுமொரு மாற்றம் Gadgets. Side Bar என்பதை எடுத்து விட்டு எங்கு வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளும் படியாக உள்ளது. விண்டோஸ் 7 பதிப்பில் themes நன்றாக உள்ளது.
இதற்கு மேல் மற்ற எல்லா இடங்களிலும் விஸ்டா போன்ற அமைப்பயே கொண்டுள்ளது. எனினும் இவை அனைத்தும் RC 1 பதிப்பில் உள்ளவையே. ஒரிஜினல் பதிப்பில் இதில் மேலும் சில சிறிய மற்றும் பெரிய மாற்றங்கள் ஏற்படலாம்.
எது எப்படியோ? தற்போது வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது மைக்ரோசாப்ட். ஏற்கனவே கூகிள் போன்ற நிறுவனங்கள் இயங்குதள சந்தையில் இறங்கிவிட்ட நிலையில் விண்டோஸ் 7ன் வெற்றியை பொறுத்தே மைக்ரோசாப்ட்டின் எதிர்காலம் உள்ளது.
RC 1 பதிப்பை பொறுத்த வரை இறுதி முடிவு..... கிழவிக்கு மேக்கப் போட்டு புது பெயரில் மணமேடையில் உட்கார வைத்திருக்கிறது மைக்ரோசாப்ட்
FIR : முதல் தகவல் அறிக்கை : விண்டோஸ் 7
Friday, 14 August 2009
by முல்லைக்கதிர்
·
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment