விவசாயியும் நவீன கண்டுப்பிடிப்பும் - நேனோ கணேஷ்!!!!
இப்படி செல்லும் போது, எவ்வளவோ இன்னல்களை அவர்கள் சந்திக்க நேரிடும். அப்படி பட்டதில் சிலவற்றை குறிப்பிட்டு யோசித்ததில் OSSAIN நிறுவனத்தார் கீழ்கண்ட இன்னல்களுக்கு ஆளாவார்கள் என்று கண்டறிந்தனர்:
1. சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தில் விவசாயிகள் நடந்து செல்ல வேண்டும்.
2. மழை சமயத்தில் அந்த இடத்திற்கு சென்றடைய கஷ்டங்கள்.
3. பாம்புகளின் ஆக்ரோஷம்.
4. இரவு நேரங்களில் பாதகமான சூழ்நிலை.
5. திருட்டு பயம்.
கிராமிய பாசன திட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட பம்புகள் எல்லாம் ஒரு கிலோமீட்டர் தொலைவிலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவு வரை இருக்கும் என்பதை மனதில் கொண்டு இவர்களின் வாழ்வு சுலபமாகும் வகையில் OSSAIN நிறுவனத்தினர் ஒரு கருவியயை கண்டு பிடித்து அதற்கு விவசாய பம்பு செட்டுக்கான தொலை நோக்கு கருவி (Remote Control for Agriculture Pumpsets) என்று பெயரிட்டனர்.
ஒரு நோக்கியா அலைபேசி, ஒரு நேனோ கணேஷ் இணக்கி இருக்கும். இவை இரண்டும் மின்சார பம்பு துவங்கியில் இணைக்கப்படும். விவசாயி எந்த இடத்தில வேண்டுமானாலும் இருந்து இந்த அலைபேசியை அழைத்து (ஒரு குறிப்பிட்ட இலக்கம் கொடுக்கப்படும்) அதை வைத்து கொண்டு பம்பை இயக்கலாம். ஒரு குறிப்பிட்ட ஒலி குறியீடை கொண்டு, பம்பு இயங்குகிறதா இல்லையா என்றும், அந்த இடத்தில மின்சாரம் உள்ளதா என்றும் கண்டறிய முடியும்.
அந்த பம்பை திருட முயற்சி நடந்தால் கூட அலைபேசிக்கு. விழிப்பாக இருக்க தகவல் அனுப்பப்படும். இது இப்போதைக்கு ஒரு சில மாதிரியுருக்களில் மட்டுமே உள்ளது. இன்றைய நவீன உலகத்தில் விவசாயிக்கு நன்மை பயக்கும் விதத்தில் இருக்கும் இந்த கருவியை கண்டுபிடத்தமைக்கு நன்றிகள் பல.
இதை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்களுக்கோ, இதை இவர்களுக்கு பரிந்துரை செய்யலாம் என்று நினைபவர்களுக்கோ, மேலும் தெரிந்து கொள்ள இந்த முகவரியை சொடுக்கவும்.http://www.nanoganesh.com/
விவசாயியும் நவீன கண்டுப்பிடிப்பும் - நேனோ கணேஷ்!!!
Friday, 14 August 2009
by முல்லைக்கதிர்
·
ஒவ்வொரு முறை விவசாயி மழைக்கு காத்து கிடந்து, பம்பு செட்டில் தண்ணீர் வருகிறதா என்று ஏங்கி, அவன் விவசாயம் செய்து முடித்து அறுவடை செய்வதற்குள் உயிர் போய் உயிர் திரும்பும். சில பேருக்கு உயிரே போய் விடும். உணர்வு பூர்வமாகவோ, அல்லது உடலை விட்டோ.... இப்படி விவசாயியின் வாழ்க்கையில் ஒரு நீங்கா அங்கம் வகிப்பது பம்பு செட். இதற்கு செல்லும் போது எவ்வளவோ சோதனைகளை தாண்டி தான் ஒரு விவசாயி அதை இயக்க செல்ல வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment