கடை திருட்டை தடுக்க கருவி!

Tuesday, 18 August 2009 ·

கடை திருட்டை தடுக்க கருவி!


கடை திருட்டை தடுக்க கருவி!

பொதுவாகவே கடைகளில் திருட்டு போவது சகஜம். இது அங்கு பெருட்கள் வாங்க வருபவர்களாலும் நடக்கலாம் அல்லது அங்குள்ள ஊழியர்களாலும் நடக்கலாம். இதை தடுக்க முன்பெல்லாம் நவீன காமெராக்களை கடைமுழுக்க பொருத்தி மோனிடோரில் கண்காணித்து கொண்டிருப்பார்கள். இன்றும் பெரும்பாலும் கடைகளில் இந்த முறையே பின்பற்றப்படுகிறது. இதில் எல்லாமே பதிவாகி இருந்தாலும் சில வேளைகளில் சிறிய பொருட்களை அவர்களின் கண் இமைக்கும் நேரத்தில் திருடி விடுவார்கள்.
ஆனால் இப்போது இதையும் தாண்டி EAS என்ற கருவி திருட்டை தடுக்க பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது இக்கருவி பெரும்பாலும் இங்குள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ளது. இவை வாசலில் இரண்டு பக்கமும் பொருத்தபட்டிருக்கும்.


நாம் பொதுவாக கடைகளில் வாங்கும் பொருட்களில் இவற்றிற்கான லேபிள்ஸ் இருக்கும். அவை நாம் பணம் கொடுக்கும் இடத்தில் ஸ்கேன் செய்யும் போது செயலிழக்க வைக்கப்படும். ஆனால் மறைத்து வைத்து திருட்டு தனமாக எடுத்து செல்லப்படும் பொருட்களில் உள்ள லேபிள்ஸ் செயல்பட்டுக்கொண்டிருப்பதால் நாம் வாசலை அடையும்போது இந்த கருவியால் உணரப்பட்டு அது சப்தத்தை உண்டு பண்ணும்.




ஆக பணம் கொடுக்காத பொருள் எடுத்து செல்லபடுவதை எல்லோருக்கும் சொல்லிவிடும். இதனால் திருடுபவர்கள் கேவலப்படுவது மட்டுமல்லாமல் சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டிவரும். இது நிறைய வகைகளில் வித்தியாசம் வித்தியாசமாக விற்பனைக்கு வந்துள்ளது.

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts