
சில வருடங்களுக்கு முன்பு கணினியில் தமிழை தட்டச்சுவது என்பது சற்றே கடினமான வேலையாகத்தான் இருந்தது. அழகி, ஈகலப்பை, என்எச்எம் என்று தன்னார்வத்தில் பலர் தமிழ் எழுதிகளை அறிமுகப்படுத்தினர். தற்போது பெரிய மென்பொருள் நிறுவனங்களும் இந்திய மொழிகளில் கணினியில் தட்டச்சுவதற்கு மென்பொருள்களை அறிமுகப்படுத்த துவங்கி விட்டனர்.
இன்று காலை கூகிளின் தமிழ் எழுதி குறித்து ஒரு பதிவு போட்டு இருந்தேன். இணையத்தில் உலவிய போது மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதற்காக ஒரு மென்பொருளை அறிமுகப்படுத்தி உள்ளதை அறிய முடிந்தது.
இந்த வசதியை மைக்ரோசாப்ட் இணைய பதிப்பு, டெஸ்க்டாப் பதிப்பு என்று இரண்டு வடிவங்களில் வெளியீட்டு உள்ளது. இதன் மூலம் நீங்கள் கணினி, இணையம் என்று எல்லா இடங்களிலும் தமிழில் தட்டச்சு செய்து கொள்ள முடியும். தமிழ் எழுதியை போன்றே நீங்கள் தட்டச்சு செய்யும் வார்த்தைகளை தானாக நிறைவு செய்யும் வசதியுடன் வருகிறது. இதனால் தமிழில் நாம் தட்டச்சு செய்யும் போது வரும் பிழைகளை தவிர்க்க இயலும். 
கூகிள் தமிழ் எழுதியை நிறுவியதை போன்றே இதனை நீங்கள் நிறுவ வேண்டும். இது குறித்து மேலும் விவரங்கள் அறிய, புக்மார்க்லெட்டாக நிறுவி கொள்ள இங்கே சென்று வழிமுறைகளை பார்க்கவும். புக்மார்க்லெட்டாக இணைய உலாவிகளில் நிறுவி கொண்டால் இணையத்தில் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சலாம். இதற்கு இணைய இணைப்பு தொடர்ச்சியாக அவசியம். 
இணைய இணைப்பு இன்றி கணினியில் எங்கு வேண்டுமானாலும் தட்டச்சு செய்து கொள்ள இதன் டெஸ்க்டாப் பதிப்பை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவி கொள்ளுங்கள். இதனை தரவிறக்க இங்கே செல்லுங்கள்(http://specials.msn.co.in/ilit/TamilPreInstall.aspx). விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7லில் எப்படி நிறுவுவது என்பதனை விளக்கமாக அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்(http://specials.msn.co.in/ilit/GettingStarted.aspx?redir=true&postInstall=false). படங்களுடன் புரியும்படி விளக்கி உள்ளனர். 
கூகிள் தமிழ் எழுதியா? மைக்ரோசாப்ட் தமிழ் எழுதியா? என்று கேட்டால் சட்டென்று சொல்ல இயலவில்லை. இரண்டுமே எளிதாகத்தான் உள்ளது. சில நாட்கள் உபயோகப்படுத்தி பார்த்து விட்டு முடிவு செய்யலாம்.
நன்றி : டெக்சங்கர்
மைக்ரோசாப்ட்டின் இணைய & டெஸ்க்டாப் தமிழ் எழுதி
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment