வைரஸை வாசலிலேயே தடுக்கும் விண் பெட்ரோல்

Thursday, 10 December 2009 ·


நமக்குத் தெரியாமல் நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் அமர்ந்து கொண்டு நம்மை ஹைஜாக் செய்திடும் வைரஸ் புரோகிராம்கள் இப்போது அதிகம் வரத் தொடங்கி உள்ளன. மேலும் நம்முடைய பெர்சனல் தகவல்களைத் திருடி அனுப்பும் வைரஸ்பைல்களும் நிறைய வருகின்றன.

இவை நம் கம்ப்யூட்டரில் புகுந்து அதன் என்ட்ரியை கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியில் பதிவு செய்திடுகையிலேயே தடுக்க முயன்றால் எவ்வளவு நன்மையாக இருக்கும். இத்தகைய பணியைத்தான் விண் பெட்ரோல் (WinPatrol) என்ற புரோகிராம் செய்கிறது.

இந்த புரோகிராமினை ஏ.ஓ.எல். இமெயில் கிளையண்ட் புரோகிராமினை வடிவமைத்த Bill Pytlovany என்பவர் உருவாக்கியுள்ளார். இந்த புரோகிராம் கம்ப்யூட்டரில் பதிந்தவுடன் நம் கம்ப்யூட்டரின் ரெஜிஸ்ட்ரியை ஒரு ஸ்நாப் ஷாட் எடுத்து வைத்துக் கொள்கிறது.

பின் அதில் ஏதேனும் கோட் வரிகள் எழுதப்படும்போதெல்லாம் இது போல எழுதப்பட இருக்கிறது. இந்த புரோகிராம் முயற்சி செய்கிறது என்று எச்சரிக்கை செய்வதுடன் நீங்கள் அனுமதி கொடுத்த பிறகே ரெஜிஸ்ட்ரியில் எழுதவிடும்.

இதன்மூலம் நாம் விரும்பும் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடுகையில் மட்டுமே நாம் இதற்கு அனுமதிக்கலாம். திருட்டுத்தனமாக நுழைந்திடும் புரோகிராம்கள் எழுத முயற்சிக்கையில் அவற்றின் பெயரைப் பார்த்துவிட்டுத் தடுத்துவிடலாம். இந்த வகையில் விண் பெட்ரோல் ஒரு செக்யூரிட்டி மானிட்டராகச் செயல்படுகிறது.

வழக்கமான ஆண்டி வைரஸ் தொகுப்புகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட வைரஸ் பைல்களின் செயல்பாட்டினை வைத்து அவற்றை அடையாளம் கண்டு தடுக்க முயற்சி செய்திடும்.

ஆனால் இந்த புரோகிராம் வைரஸ் புரோகிராம்களுக்கென உள்ள சில மாறுபட்ட செயல்தன்மைகள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு செயல்படுகிறது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட www.winpatrol.com என்ற தளத்திற்குச் செல்லவும்.

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts