விண்டோஸ் எக்ஸ்பி ரிப்போர்ட்

Monday, 21 December 2009 ·


விண்டோஸ் எக்ஸ்பியில் ஏதேனும் ஒரு புரோகிராம் கிராஷ் ஆனால் , உடனே இது போல இந்த புரோகிராம் கிராஷ் ஆகிவிட்டது. அதற்கான ரிப்போர்ட்டினை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அனுப்பவா? என்ற செய்தியுடன் ஒரு கட்டம் கிடைக்கும். யெஸ் என்ற பட்டனை அழுத்தினால் , உடனே அறிக்கை தயாரிக்கப்பட்டு, கம்ப்யூட்டர் இன்டர்நெட் இணைப்பில் இருந்தால் அனுப்பப்படும்.

இந்த ரிப்போர்ட் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சரி செய்திட டேட்டா கிடைக்கிறது. எந்த சூழ்நிலையில் அந்த புரோகிராம் கிராஷ் ஆனது; அதற்கு ஆப்பரேட்டிங் சிஸ்டம் காரணமா? அல்லது வேறு எதுவும் காரணமா என்று ஆய்வு செய்திட முடிகிறது.

ஆனால் சிலர் நமக்கு எதற்கு இந்த வேலை என்று எண்ணி பெரும்பாலும் ரிப்போர்ட் அனுப்ப வேண்டாம் என்ற பட்டனையே அழுத்துகின்றனர். இதற்குக் காரணம், புரோகிராம் கிராஷ் ஆகிப் பிரச்னையில் இருக்கும் நமக்கு இதுவும் ஒரு தொல்லை என்று எண்ணுகின்றனர். அடுத்தபடியாக பெரும்பாலான கம்ப்யூட்டர்கள், எந்நேரமும் இன்டர்நெட் இணைப்பில் இருப்பதில்லை. எனவே ரிப்போர்ட் தயார் செய்தாலும் பலன் இல்லை. இதன் பின் இணைப்பு ஏற்படுத்தினால், ரிப்போர்ட் செல்லப்போவது இல்லை. எனவே இது போன்ற ரிப்போர்ட் தயாரிக்கும் வசதியை முடக்கினால் என்ன என்று எண்ணுகின்றனர்.

அவர்களுக்கான செட்டிங்ஸ் இதோ....

Control Panel ஐத் திறக்கவும்.

Preformance and Maintenance என்பதில் கிளிக் செய்திடவும்.

பின் System என்பதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.

இதற்குப் பிறகு கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் Advanced என்றடேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த விண்டோவின் கீழாக Error Reporting என்ற பட்டன் இருக்கும். இதில் கிளிக் செய்திடவும்.

இதில் Disable error reporting என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இருமுறை ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

இனிமேல் எந்த புரோகிராம் கிராஷ் ஆனாலும் எர்ரர் ரிப்போர்ட்டிங் அறிக்கை தயாரிக்கவா என்ற செய்தி கிடைக்காது.

எழுதியவர் : கார்த்திக்

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts