
டுவிட்டரில் மேல் அதிக காதல் கொண்டவராக நீங்கள் இருந்தால் டுவிட்டரின் உச்ச பயன்களை அடைய உதவும் மிகச்சிறந்த 4 டுவிட்டர் கிளையண்ட்கள் பற்றி பார்க்கலாம். TweetDeck (Windows/Mac)
பல சோசல் நெட்வெர்க் தளங்களின் பகிரப்படும் டுவிட்டர் வகையான தகவல்களை ஒரே இடத்தில் மனேஜ் செய்து கொள்ளலாம். அத்தோடு ஸ்பாம் டுவிட்களை தடை செய்யலாம் அதனுடன் ஒன்றுக்கு மேற்ப்பட்ட டுவிட் கணக்குகளை பேணலாம். நீங்கள் இதுவரை செய்த டுவிட்களை பேக்கப் செய்து கொள்ளவும் முடியும். இவ்வளவும் கணனியில் TweetDeck ஐ இண்டோல் செய்ததும் சாத்தியமாகிறது. iPhone இலும் TweetDesk இயங்குவது சிறப்பம்சம்.
Seesmic (Windows/Mac)
Adope air எனும் தொழிட்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டது. இதுவும் Tweet Desk போன்றது. ஆனால் iPhone இல் இயக்கமுடியாது. உங்கள் வசதிக்கேற்ப சில் மாற்றங்களை செய்து கொள்ள முடியும். உதாரணமாக எவற்றுக்கு notifications தரவேண்டும். எந்த URL shortening தளத்தை பயன்படுத்த வேண்டும் அத்துடன் எந்த image hosting தளத்தை உபயோகிக்க வேண்டும் போன்ற தகவல்களை வழங்கலாம். வீடியோ மற்றும் படங்களை நேரடியாக seesmic இல் பகிரவும் முடியும்.
Tweetie (Mac)
மிகச் சிறந்த வடிவமைப்பை கொண்ட Tweetie, உங்களுக்கு பிடித்த Topic மட்டும் தெரிவு செய்து அதை மட்டும் கவனித்து அப்டேட்ஸ்ஸை அலேட் செய்து அனுப்புதல் மற்றும் ஒன்றுக்கு மேட்ப்பட்ட Reply விண்டோக்களையும் திறந்து வைத்துக்கொள்ளல் போன்ற வசதிகள் உண்டு ஆயினும் இது Mac இல் மட்டுமே விண்டோஸ்ஸில் இயங்காது.
Brizzly (Web-Based)
கணனியில் இன்ஸ்டோல் செய்யாமல் இணையத்திலேயே இயங்கக் கூடியது. டுவிட்டரின் உண்மையான வடிவமைப்புடன் கூடிய ஆனால் டுவிட்டரை விடச் சிறந்த Brizzly இன் சிறப்பம்சங்கள், படங்கள் மற்றும் வீடியோக்களின் thumbnail privew ஐ காட்டுதல், தானகவே URL ஐ விரிவாக காட்டுதல் போன்றவை யாகும். இலவச சேவைதான் Brizzly ஆயினும் உடனே பயன்படுத்த முடியாது. அதன் invitations ஐ இங்கே Request(http://twitter.com/search?q=brizzly%20invite) செய்து காத்திருக்க வேண்டும்.
4 சிறந்த டுவிட்டர் கிளையண்ட்கள்
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment