Linuxஇல் Firefox Java Plugin சேர்க்க

Thursday, 10 September 2009 ·




லீனக்ஸ் இல் Firefox உபயோகப்படுத்தும் நண்பர்களுக்கு சில தொல்லைகள் உண்டு.அவை Flash & Java Plugin Install செய்வது. இவை எதற்கு என சிலர் கேட்கலாம் . அவர்களுக்கு ஒரு சிறு அறிமுகம்.youtube இல் Video Firefox இல் பார்க்க வேண்டுமானால் அதற்கு Flash Plugin அவசியம். மேலும் சில websites Java உபயோகப்படுத்தி எழுதப்பட்டிருக்கும். அவற்றை பார்க்க வேண்டுமானால் Java Plugin அவசியம்.உதாரணமாக வங்கிகள் தரும் Netbanking websites இல் பெரும்பாலும் Java உபயோகப்படுத்தப்பட்டிருக்கும்.

உங்கள் Firefox Browser இல் Java & Flash Plugin உள்ளதா இல்லையா என அறிய கீழ்க்கண்ட வழிமுறையை உதவும்.உங்கள் Firefox Address Bar இல் about:plugins என type செய்து Enter செய்க.செய்தால் கீழ்க்கண்ட Screen ஐ காணலாம்.Flash & Java Plugin இன்ஸ்டால் செய்ய பட்டிருந்தால் கீழ்கண்டவாறு தெரியும் .




இனி எவ்வாறு Java Plugin இன்ஸ்டால் செய்வதென காண்போம் .முதலில் உங்களிடம் என்ன Java version உள்ளது என் தெரிந்து கொள்ள வேண்டும். Java 4 ,Java 5 அல்லது Java 6 என தெரிந்து கொள்க.

ஒவ்வொரு version லும் Java Plugin வேறு வேறு இடங்களில் இருக்கும் . உதாரணமாக
Java 4 என்றால் நீங்கள் Java நிறுவிய இடம் /usr/java/ என வைத்து கொள்வோம். இதில் Java Plugin /usr/java/j2sdk1.4.2_06/jre/plugin/i386/ns610-gcc32/libjavaplugin_oji.so என்ற இடத்தில இருக்கும் .இதில் libjavaplugin_oji.so என்பது தான் Java Plugin.

Java 5 என்றால்
/usr/java/dk1.5.0_12/jre/plugin/i386/ns7/libjavaplugin_oji.so

Java 6 என்றால்
/usr/java/jdk1.6.0_10/jre/plugin/i386/ns7/libjavaplugin_oji.so

இந்த Java Plugin Path ஐ எடுத்துகொள்க. பின் உங்கள் Firefox இன்ஸ்டால் செய்துள்ள folder க்கு செல்க . அதில் plugins என்ற folder இருக்கும் . உதாரணமாக
Firefox என்றால் நீங்கள் Java நிறுவிய இடம் /usr/local/ என வைத்து கொள்வோம்.இதில்
/usr/local/firefox/plugins
என்று இருக்கும் .இனி உங்கள் லினக்ஸ் இல் Terminal Open செய்க . அதில் Firefox Plugin Folder செல்க . உதாரணமாக மேற்கண்டதை எடுத்து கொண்டால்

cd /usr/local/firefox/plugins என் டைப் செய்க. Firefox folder சென்ற பின்

Java 4 என்றால்
ln -s /usr/java/j2sdk1.4.2_06/jre/plugin/i386/ns610-gcc32/libjavaplugin_oji.so என டைப் செய்து Enter செய்க

குறிப்பு :/usr/java/j2sdk1.4.2_06/ என்பது நீங்கள் Java இன்ஸ்டால் செய்ததை பொறுத்து மாறும் .

Java 5 என்றால்
ln -s /usr/java/dk1.5.0_12/jre/plugin/i386/ns7/libjavaplugin_oji.so என டைப் செய்து Enter செய்க

குறிப்பு :/usr/java/dk1.5.0_12/ என்பது நீங்கள் Java இன்ஸ்டால் செய்ததை பொறுத்து மாறும் .

Java 6 என்றால்
ln -s /usr/java/jdk1.6.0_10/jre/plugin/i386/ns7/libjavaplugin_oji.so என டைப் செய்து Enter செய்க

குறிப்பு :/usr/java/jdk1.6.0_10/ என்பது நீங்கள் Java இன்ஸ்டால் செய்ததை பொறுத்து மாறும் .

மேற்கண்ட படத்தில் mozilla என்பதற்கு பதிலாக Firfox என வைத்து கொள்க. ln -s என எடுத்து கொள்க

என் டைப் செய்து Enter செய்க .இப்போது Java Plugin உங்கள் Firefox ல் இன்ஸ்டால் செய்ய பட்டிருக்கும் .பின் Firefox ஐ Restart செய்து விட்டு about:plugins என Address Bar ல் அடித்து பார்த்தால் Java Plugin இன்ஸ்டால் செய்ய பட்டது தெரியும் .

படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts