
ஒரு விளம்பரம்கூட போடாமல் எப்படி ட்விட்டரை ஓட்ட முடியுது?
இதுவே ட்விட்டர், கூகிள் கையில் இருந்தால் அதன் 45 மில்லியன் (4.5 கோடி- ஜூன் 2009 புள்ளிவிவரம்) உறுப்பினர்களின் ஒவ்வொரு ட்வீட்டுக்கும் (Message) விளம்பரம் போட்டே ’கலக்கலா’ கல்லா கட்டியிருப்பாங்க.
ட்விட்டருக்கு என்னதான் Deep Pocket இருந்தாலும் ஒவ்வொரு ட்வீட்டுக்கும் (Message) தினசரி செலவு எகிறிக்கொண்டே இருக்குமே?
ஒருவேளை Premium Account அறிமுகப்படுத்தி Freemium பிசினஸ் மாடலுக்கு மாறப் போகிறார்களோ என்றெல்லாம் பலர் நினைத்துக் கொண்டு இருந்தார்கள்.
இப்போது ட்விட்டரிலும் விளம்பரங்கள் வரப்போகிறது என்று, என்று ட்விட்டர் சொல்லி இருக்கிறது.
விளம்பர வருவாயை வைத்துக்கொண்டு இந்தியாவிலும் ட்விட்டரை கொண்டுவாங்க சார்.
எவ்வளவு நாள் வலைப்பூக்களில் மட்டும் கும்மி அடித்துக் கொண்டு இருப்பது?
கம்ப்யூட்டர் "ON"-லே இல்லேனாலும், நேரம் காலம் பார்க்காமல் இன்டெர்நெட் வசதி இல்லாத செல்போனை மட்டுமே வைத்துக்கொண்டு நண்பர்களுடன் ட்விட்டரில் இடைவிடா கும்மி அடிப்பது, நமக்கு பரவச அனுபவமாக இருக்கும் என்பது என் கருத்து.
இன்டெர்நெட் வசதியோடு செல்போன் வைத்து இருப்பவர்கள் http://m.twitter.com/ போய் ட்விட்டலாம்.
விளம்பர வருமானம் தேடும் ட்விட்டர்
Subscribe to:
Post Comments (Atom)
Archives
About this blog
என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

0 comments:
Post a Comment