கணிணியின் ஆழ்துயில்

Tuesday, 15 September 2009 ·

இப்போது வந்துள்ள புதுவகையான SSD (Solid State Drive) ஹார்டு டிரைவுகள் கணிணியின் வேகத்தை வெகுவாக கூட்டியுள்ளதாம். கணிணியின் பூட்டிங்கிலிருந்து மற்ற எல்லா வேலைகளும் வெகு விரைவாக இருப்பதால் ஒருமுறை SSD உள்ள கணிணியில் வேலை செய்த பின் சாதாரண சுழல்தட்டுள்ள ஹார்டிரைவில் வேலை செய்வது மிக கடினமாக உள்ளதாக சொல்கின்றார்கள்.

இப்போது நெட்புக்குகளில் சராமாரியாக வரும் இவை விரைவில் கார்பரேட் செர்வர்களையும் நோக்கி பயணிக்கும் போலிருக்கின்றது. இந்த NAND சில்லு SSD -டிரைவுகள் சீக்கிரத்தில் இன்றைய கிளாசிக் ஹார்ட்டிஸ்குகளை பலி கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

என் கணிணி வேகமாக பூட்டாகிவர நான் பயன்படுத்தும் பழங்கால டெக்னிக் ஹைபர்னேசன்.(Hibernation). வெண்பனி பொழிந்து எங்கும் குளிர் நிறைந்து கிடக்கும் இக்குளிர்காலத்தில் மனிதர் நாம் Fireplace-யை நாடுகிறோம்.அப்பாவி மிருகங்கள் என்ன செய்யுமாம்.
குளிர்காலம் வந்ததும் அவை தம் குகைகளிலே ஆழ்நிலை தூக்கத்திற்கு போய்விடும் என்கின்றார்கள்.

அவை மேல் பரந்திருக்கும் ரோமங்கள் சிறிது உஷ்ணம் கொடுக்கும் அதேவேளையில் உடலில் அவை அது நாளும் சேமித்து வைத்திருந்த கொழுப்பு அவை உயிர்காக்கும். கதிரவன் எட்டிப்பார்க்கும் வசந்தகாலம் வந்ததும் இத்துயிலிருந்து எழும்பி மீண்டும் இரை தேட ஓடத் தொடங்கும். இந்த இயக்கம் தான் ஹைபர்னேசன்.

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts