நான் தினமும் விசிட் செய்யும் டாப் 5 இணையத்தளங்கள்

Thursday, 17 September 2009 ·



gmail.com எழுந்ததுமே கண்விழிப்பது gmail ல தான். வாடிக்கையாளர்களின் கேள்விகள், சக ஊழியர்களுடன் தொடர்பு, நியூஸ் லெட்டர்ஸ், என்று எதுன்னாலும் gmail ல தாங்க. வேறு hosting செர்வர்கள் எவ்வளவு வசதியுடன் email சேவையை வழங்கினாலும் gmail போல வருமா? நண்பர்களுடன் gmail உள்ளேயே வீடியோ அரட்டை, மெயில் கம்போஸிங்

செய்யும் பொது உதவும் ஆங்கில அகராதி, லேபல் வசதி தானகவே save செய்வது போன்றவை என்னைக் கவர்ந்தவை. gmail இல்லேனா நானும் இல்லை என்றளவுக்கு gmail முக்கியமாகிவிட்டது.

Facebook.com சோசல் நெட்வேர்க் தளங்களிலேயே டாப் என்று தெரிந்தாலும் நேர பற்றாக்குறையால் கவனம் செலுத்தாமல் இருந்தபோது Facebook இல் joint பண்ணாம இருந்தால் நண்பர்களிடம் இமேஜ் குறைந்திருமே என்ற ஏக்கம். ஆனால் இப்போது கிட்டத்தட்ட அதற்கு அடிமையானது போல் தான். write something இல் தட்டிவிட்டால் போதும் சிக்கலான மேட்டரிலிருந்து அறையை துப்பரவு செய்ய எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்றது வரை ஐடியாக்கள் வந்து குவியும். இப்போதெல்லாம் பக்கத்து வீட்டு நண்பருடன் வெளியே செல்வதற்கு தீர்மானிப்பதும் Facebook ல தான்.

google.com உலாவியில் Homepage என்றதால மட்டும் இல்ல மிக பிடித்த துல்லியமான தேடுபொறியும் கூட. பலமுறை இதன் ஆற்றலை கண்டு பிரமித்ததுண்டு. இதில் Search History மற்றும் bookmark வசதி என்னோட favorites.

twitter.com பலருக்கு டுவிட்டர் புதுசு என்ன விசயங்களை டுவிட்டிங் செய்யலாம் என்று தயக்கமாகவும் இருக்கலாம். டுவிட்டர் வந்தே ஒரிரு வருடங்கள் தான் அதனால் எங்கள் எல்லாருக்குமே டுவிட்டர் புதிசுதான் ஆகையால் தயங்காமல் டுவிட்டிங் செய்யலாம் . உதாரணமாக கொட்டாவி தும்மல்ல இருந்து ஞாபகத்துக்கு வரும் கடி யோக்ஸ் எல்லாம் உடனே நண்பர்களை சென்றடைய செய்யனுமே அதுக்கு டுவிட்டிங் தான் சரியான வழி. ஒபமா, பிரிட்னி பியர்ஸ் போன்ற வி.ஐ.பி க்களை Follow பண்றது யாருக்குத்தான் பெருமையா இருக்காது.

news.google.com சற்று பிரயோசனமா நாட்டு நடப்புக்களை அறிந்து கொள்ளலாமே என்று ஒரு எண்ணம்தான் google news விசிட்டுக்கு காரணம். Science and technology பகுதிதான் எப்போதும் எனது தெரிவு.

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts