மாணவர்களை வன்முறையாளராக மாற்றும் ஆக்ஷன் படங்கள்

Friday, 24 July 2009 ·

'வன்முறை கலந்த ஆக்ஷன் படங்கள், மாணவர்களை வன்முறையாளர்களாக மாற்றுகிறது' என்று அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் திரைப்படம் பற்றி கருத்து கணிப்பு நடத்தினார் மனநல மருத்துவர் சமீர் பரிக். இதுபற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

14 முதல் 17 வயதுள்ள மாணவர்கள் அதிகளவில் வன்முறை படங்களையே விரும்பி பார்க்கின்றனர். அதைப் பார்த்துவிட்டு அதேபோல் தங்களை மாற்றிக்கொள்ள விரும்புகின்றனர்.

79 சதவீத மாணவர்கள் வன்முறை படங்களை மட்டுமே பார்க்கின்றனர் என்ற தகவலும், 34 சதவீதம் மாணவிகள் ஆக்ஷன் படங்களை பார்க்கும் தகவலும் தெரியவந்தது.

அப்படங்கள் பெரிய அளவில் அவர்கள் மனநிலையை பாதிக்கிறது. இதன் விளைவாக 44 சதவீத மாணவர்கள் யாரையாவது தாக்குவதையோ, அடிக்க வேண்டுமென்ற எண்ணத்தையோ கொண்டுள்ளனர். இவர்களில் 32 சதவீதத்தினர் மாணவிகள்.

35 சதவீத மாணவர்கள் சக நண்பர்கள் மத்தியில் தங்களை முரட்டுத்தனமானவர்களாகக் காட்டிக்கொள்கின்றனர். டீன் ஏஜ் மாணவ&மாணவிகளின் உணர்வுகளை புரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம்.

இப்போதுள்ள சூழலில் அவர்கள் தங்களை முரட்டுத்தனமாக சித்தரித்துக்கொள்ள எண்ணுகின்றனரே தவிர செயல்வடிவில் அதை செய்வதில்லை. ஆனால் எதிர்காலத்தில் அப்படி மாறக்கூடும்.

தங்களது நண்பர்கள் சிலர் பள்ளிக்கு ஆயுதமும் எடுத்துச் செல்வதாக சில மாணவர்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். 31 சதவீத மாணவர்கள் தங்களில் சில மாணவர்கள் யாரோ ஒருவரால் மிரட்டப்படுகின்றனர், காயப்படுத்தப்படுகிறார்கள் என்கின்றனர். மாணவிகளில் 22 சதவீதத்தினரும் இதே கருத்தை தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவங்களின் ஹைலைட் என்னவென்றால் பள்ளிக்கு சென்றால் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற காரணத்தால் அங்கு செல்வதை பலர் விரும்புவதில்லையாம். 45 சதவீத மாணவிகள் இந்த கருத்தை ஆமோதிக்கின்றனர்.

இந்த ஆய்வு மூலம் மேற்குறிப்பிட்ட மனநிலை உள்ள மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை நல்வழிப்படுத்துவது அவசியம் என்பது தெரிகிறது. சினிமா காதாசிரியர்கள்,

இயக்குனர்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இளவயதினரின் மனநிலையை புரிந்துகொள்வதற்கான பணியில் உடனே ஈடுபடவேண்டும். அவர்களுடன் இப்போதே கலந்தாய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

0 comments:


clock

எனது மற்றுமொரு வலைப்பூ "தமிழ்சிகரம்"

free counters

-காலநிலை-

bloguez.com

Archives

About this blog

என் நண்பனின் பரிசு!! இந்த வலைப்பூ 24.07.2009 இல் இருந்து முல்லைக்கதிர் வலைப்பூவானது ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக வலைப்பதிவில் உள்ளது.

Recent Posts